சென்னை எண்ணெய் கசிவு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஜனவரி 28-ம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே 2 சரக்கு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது.

இதனால், கடற்கரை பகுதி எண்ணெய் படலமாக காட்சியளித்தது. இதையடுத்து கச்சா எண்ணெய் படலத்தை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே எண்ணெய் கசிவால் பாதிப்படைந்த மீனவர்களுக்கு இழப்பீடு மற்றும் விசாரணை குறித்து சோமசுந்தரம் என்பவர் வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்பானையம் எண்ணெய் கசிவு குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தவு பிரபித்துள்ளது. மேலும் கப்பல் போக்குக்வத்து துறை, சுற்றுசூழல் துறை, தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து இதுகுறித்த வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்துள்ளது.