Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் கைதி எண் 1440 வழங்கிய அதிகாரிகள்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையின் கைதி எண் 1440 என்ற எண்ணை அதிகாரிகள் வழங்கி உள்ளனர்.

Officials who gave prisoner number 1440 in Puzhal Jail to Minister Senthil Balaji
Author
First Published Jun 15, 2023, 12:12 PM IST

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது பொதுமக்களிடம் வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் இறுதியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்று அதிகாலை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே உடனடியாக அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இயத்தில் செல்லக்கூடிய ரத்தக் குழாய்களில் 3 குழாய்களில் அடைப்பு இருப்பதாகவும், உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் பரிந்துறை செய்தனர்.

தமிழ் இலக்கியத்தில் செங்கோல் என்று தான் உள்ளது; மாறாக இஸ்லாம், கிறிஸ்தவம் இல்லை - அண்ணாமலை விளக்கம்

மேலும் அமைச்சர் சிகிச்சையில் உள்ளதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாத காரணத்தால் அதிகாரிகள் நீதிபதியை மருத்துவமனைக்கே அழைத்து வந்தனர். பின்னர் செந்தில் பாலாஜிக்கு 28ம் தேதி வரை சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இன்று காலை அமைச்சருக்கு புழல் சிறை கைதிக்கான 1440 என்ற கைதி எண் வழங்கப்பட்டுள்ளது.

ஐஎப்எஸ் நிதி நிறுவன முறைகேடு; ரூ.550 கோடி வசூல் செய்து கொடுத்த காவல் அதிகாரி கைது

மேலும் அமைச்சர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ஜாமீன் மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதே போன்று அமைச்சர் செந்தில் பாலாஜியை அவரது குடும்பத்தினர் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios