நீட்தேர்விற்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி  மாணவிகளின் திடீர் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

11,12  ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிகளின், நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்தால் நுங்கம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மாணவிகளின் இந்த போராட்டத்திற்கு தலைமை ஆசிரியர் ஆதரவு  தெரிவித்துள்ளதாக பள்ளி மாணவிகள்  தெரிவித்துள்ளனர்.  இருந்த  போதிலும் அந்த  பகுதியில்  போலீசார்  மாணவர்களை  கட்டாயமாக  அப்புறப்படுத்தும்  முயற்சியில் ஈடுபட்டு  வருகின்றனர்.

மேலும்  சில மாணவிகள் பல  கேள்விகளை முன் வைக்கின்றனர். அதாவது ஜல்லிக்கட்டுக்காக  தமிழகமே  திரண்டு வந்து  போராடி  வெற்றி பெற்றதை போல ஏன் நீட் தேர்விற்காக அந்த அளவிற்கு போராட்டம்  நடத்தவில்லை  என  கேள்வி  எழுப்புகின்றனர்

முன்னதாக,  நீட் தேர்விற்கு எதிராக  எந்த போராட்டமும்  தமிழகத்தில்  நடத்த  கூடாது என  நேற்று  உச்சநீதிமன்றம்  தெரிவித்து  இருந்தது.  இதனையும் மீறி  தற்போது  மாணவிகளின்  போராட்டம் வலுப்பெற்று  வருகிறது.