தமிழகத்தில் தற்காலிக பெண் ஊழியர்களுக்கு 6 மாதம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் மத்திய அரசின் கல்வி மேம்பாட்டு திட்டமான ‘சம்கரா சிக்சா திட்டத்தின் கீழ் தற்காலிக பெண் ஊழியர்கள் 12 வாரங்களே மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் தேசிய மனித உரிமைகள் ஆணையிஅம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. 

இந்த நடவடிக்கை காரணமாக தற்போது தற்காலிக பெண் ஊழியர்களுக்கு 6 மாதம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க உறுதியளித்துள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னையின் புதிய கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்... யார் இவர்..? காவல்துறையில் கடந்து வந்த பாதை..

இந்திய மகப்பேறு சலுகை சட்டத்தின் படி, பெண்களுக்கு 26 வாரங்கள் அதாவது 6 மாதங்கள் விடுப்புடன் கூடிய விடுமுறையை கட்டாயம் வழங்க வேண்டும். 2 குழந்தைகளுக்கு மேல் ஒரு பெண் கர்ப்பமடைந்தாலும் அவருக்கு 12 வாரங்கள் அதாவது 3 மாதம் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. இது அனைத்து தனியார் ஊழியர்களுக்கும், முறைசாரா தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களை பொறுத்தவரை, 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றிருந்தாலும், 2வது முறை மகப்பேறு விடுப்பு கோரும் பெண்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும்.

இந்த சூழலில் மத்திய அரசின் கல்வி மேம்பாட்டு திட்டமான சம்க்ரா சிக்சா திட்டத்தின் கீழ் தற்காலிக பெண் ஊழியர்களுக்கு 12 வாரங்களே ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதுகுறித்து தமிழக அரசின் முறையிட்டது. இந்த சூழலில் தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் 6 மாதம் மகப்பேறு விடுமுறை அளிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

அரசு நிறுவனங்களில் மகப்பேறு விடுமுறைகள் சரியாக கடைபிடிக்கப்பட்டு வந்தாலும், தனியார் நிறுவனங்களை பொறுத்த வரை பெண்களுக்கு மகப்பேறு விடுமுறைகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பணம் இல்லாத ஒரே காரணம்; டிராக்டர் ஓட்டும் பட்டதாரி பெண் - படிப்பை தொடர முடியாத அவலம்