Notice to Bus driver. met heart attack and dead
பேருந்து வேலை நிறுத்தம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வந்தததைப் பார்த்த அரசுப் பேருந்து ஓட்டுநர் தேவராஜ் என்பவர் திடீரென மரணம் அடைந்ததால் போக்குவரத்து ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் கடந்த வியாழக்கிழமை மாலை முதல் தமிழகம் முழுவதும் 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகினற்னர்.
சென்னை உயர்நீதிமன்றமும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு தடைவிதித்து உத்தரவிட்டது. மேலும் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படு வருகிறது.
இந்நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஈரோடு மாவட்டம் மைலம்பாடியை சேர்ந்த அரசு பேருந்து ஒட்டுநர் தேவராஜ் என்பருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நோட்டீசைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தேவராஜனுக்கு மாரடைப்பு ஏறபட்டது. இதையடுத்து தேவராஜனை அங்கிருந்தவர்கள் மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே அவர் மரணடைந்தார்.
இச்சம்வம் 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
