இந்த மாதம் 29 ஆம் தேதியுடன் தென் மேற்கு பருவமழை முடிவடையும் நிலையில் அன்றில் இருந்தே வட கிழக்கு பருவ மழையும் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் இறுதியில் சற்று முன்கூட்டியே தென் மேற்கு பருவமழை தொடங்கியது. தமிழகத்தைப் பொறுத்தவரை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்தது.

அதே நேரத்தில் கேரளாவிலும், கர்நாடகாவிலும் தென் மேற்குப் பருவ மழை வெளுத்து வாங்கியது. கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாதமழை கொட்டித் தீர்த்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் மழை வெள்ளத்தில் உயிரிழந்தனர். பலர் மாயமாகினர்.
20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கேரள மாநிலத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதுதான் அங்கு கொஞ்சம், கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது.

இதே போன்ற கர்நாடக மாநிலம் குடகு மலைப் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் காவிர ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேட்டூர் அணை 4 முறை நிரம்கி வழிந்தது. இந்நிலையில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.
இதே போல் இமாச்சலபிரதேசத்தில் 14 ஆண்டுகளுக்குபிறகுதற்போதுதான்அதிகமழைபெய்கிறது. கடந்த 4 தினங்களில்அங்குஇயல்பைவிட 33 சதவீதம்அதிகமாகமழைபெய்துள்ளது. டாலேபுயலால்பருவமழைமேலும்அதிகரிக்கலாம்என்றுஇந்தியவானிலைஆய்வுமையம்தெரிவித்துள்ளது.

ஜம்முகாஷ்மீர், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம்மாநிலங்களில்தென்மேற்குபருவமழையால்பலத்தமழைபெய்தது.
இதனிடையே வருகிற 29-ந்தேதியுடன்தென்மேற்குபருவமழைமுடிவடைவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆனால் உடனடியாக அன்றில் இருந்தே வடகிழக்குபருவமழைதொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை சீசனில்தான் அதிக மழை கிடைக்கும். இதனால் தமிழக விவசாயிகள் வடகிழக்கு பருவ மழையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
