சுனாமி எச்சரிக்கை இல்லை...!! வானிலை மையம் அறிவிப்பு

https://static.asianetnews.com/images/authors/5375b41b-c303-5568-beda-e699e57b9beb.jpg
First Published 12, Feb 2019, 1:13 PM IST
No Tsunami Warning !! metrological Center Announcement
Highlights

நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1-ஆக பதிவானது. அதிர்வானது, வடக்கு அந்தமான், சென்னை மற்றும் போர்ட்பிளேர் பகுதிகளில் உள்ள நிலநடுக்க கருவிகளில் பதிவாகி உள்ளது. இது கடல் பகுதியில் நேரிட்டதால் நிலப்பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை. சுனாமி எச்சரிக்கை விடுக்கவில்லை என்று சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.

சென்னைக்கு வடகிழக்கு வங்கக்கடலில் 600 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 7.02 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1-ஆக பதிவானது. இதன் காரணமாக சென்னை, ஆந்திரா மாநிலங்களில் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. அதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்தது. 

இந்நிலையில் இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் இன்று காலை 7.02 மணியளவில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே 600 கி.மீ., தொலைவில், கடல் மட்டத்திற்கு கீழ் 10 மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1-ஆக பதிவானது. அதிர்வானது, வடக்கு அந்தமான், சென்னை மற்றும் போர்ட்பிளேர் பகுதிகளில் உள்ள நிலநடுக்க கருவிகளில் பதிவாகி உள்ளது. இது கடல் பகுதியில் நேரிட்டதால் நிலப்பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை. சுனாமி எச்சரிக்கை விடுக்கவில்லை என்று சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார். 

loader