பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் பதில் அளித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் மட்டமான அரசியல் செய்வோருக்கு பதில் அளித்து விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் பதில் அளித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் மட்டமான அரசியல் செய்வோருக்கு பதில் அளித்து விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை என்று கூறியுள்ளார். உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தபோது முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்.
உங்களில் ஒருவன் என்ற நிகழ்ச்சி மூலம் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துவருகிறார். இன்று வெளியான அந்த நிகழ்ச்சியின் புதிய வீடியோவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம் பற்றி கருத்து கேட்கப்பட்டது.
"இதுபற்றி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கெனவே இந்த விவகாரம் குறித்து இரண்டு முறை விரிவான விளக்கம் அளித்துள்ளார். மேலும் இதுபற்றி பேசி மட்டமான அரசியல் செய்பவர்களுக்கு விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை. மக்கள் பணிகளைச் செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது." என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்
Tamilnadu Rain: அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 25 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை..!
இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் பிடிஆர் ஆடியோ விவகாரம் பற்றி பதில் அளித்துள்ளார். முன்னதாக, திங்கட்கிழமை முதல்வர் மு.க. ஸ்டாலினும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் சந்தித்துப் பேசினார்.
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, 2023 அன்று சமூக வலைதளங்களில் வெளியான ஆடியோ திமுகவினரை திகைக்க வைத்துள்ளது. சர்ச்சைக்குரிய அந்த ஆடியோ பற்றி தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார். அதில் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் தங்கள் வாழ்நாளில் சம்பாதித்ததை விட ஒரு வருடத்தில் அதிக பணம் சம்பாதித்ததாக அவர் குற்றம் சாட்டியதாக பேசி இருந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 25ஆம் தேதி மற்றொரு ஆடியோவை வெளியிட்ட அண்ணாமலை, திமுக உள்ளிருந்து சிதைந்து வருகிறது என்று விமர்சித்திருந்தார்.
அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர், அந்த ஆடியோ "நான் பேசியதாக வெளியான 26 வினாடி ஆடியோ தீங்கிழைக்கும் நோக்கில் ஜோடிக்கப்பட்டது" என்று தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் தனது குரலில் ஆடியோவை உருவாக்கியுள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த ஆடியோ விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் முதல்வர் பதில் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வலியுறுத்தி வரும் நிலையில் முதல்வர் அதற்கு பதில் அளித்துள்ளார்.
பிரதமரை மோடியை உதவாக்கரை என்று விமர்சித்த பிரியங்க் கார்கே! பாஜக கடும் கண்டனம்
