No tasmac shop

முதியோர் இல்லம் அருகே “ NO TASMAC “ கடை ! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி !!கோவில்கள், பள்ளிகள், குடியிருப்புகளைத் தொடர்ந்து முதியோர் இல்லங்கள் அருகிலும் டாஸ்மாக் மதுபான கடைகளை அமைக்க கூடாது என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தொலைவுக்குள் அமைக்கப்பட்டுள்ள மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழகத்தில் 3300 மதுக் கடைகள் அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக புதிய கடைகளை அரசு அதிகாரிகள் திறக்க முயன்றபோது பொது மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில் கோவை மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்த ராஜூ என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் முதியோர் இல்லம் அருகே டாஸ்மாக் மதுக்கடைகள் அமைப்பதை தடை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் வழிபாட்டு தலம், கல்வி நிறுவனங்கள் அருகிலும் டாஸ்மாக கடைகளை அமைக்க கூடாது எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, தமிழகத்தில் முதியோர் இல்லம் அமைந்துள்ள பகுதி அருகே டாஸ்மாக் மதுக்கடைகளை அமைக்க தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.