Asianet News TamilAsianet News Tamil

சிபிஎஸ்இ மறுதேர்வு கிடையாது ..! 10 ஆம் வகுப்பு மாணவர்கள் குஷி...!

no reexam for cbse 10th standard
no reexam for cbse 10th standard
Author
First Published Apr 3, 2018, 1:26 PM IST


சிபிஎஸ்இ 10  ஆம் வகுப்பு கணித பாடத்திற்கு மறுதேர்வு கிடையாது என  அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது

மனிதவள மேம்பாட்டு துறை செயலர் அனில் ஸ்வரூப் இந்த அறிவிப்பை  வெளியிட்டு உள்ளார்

இந்த ஆண்டுக்கான சிபிஎஸ் இறுதி தேர்வில் 12 ஆம் வகுப்பு பொருளாதார வினாத்தாள் மற்றும் 10 ஆம் வகுப்பு கணித வினாத்தாள் வெளியானது தொடர்பாக பல்வேறு போரட்டங்கள் நடைபெற்றது.

ஒரு தரப்பினர் மறுதேர்வு நடத்த வேண்டும் எனவும், இன்னொரு தரப்பினர் மறுதேர்வு வேண்டாம் என்றும் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்  மத்தியில் பெரும் சலசலப்பு காணப்பட்டது.

no reexam for cbse 10th standard இந்நிலையில்,12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களின் பொருளாதாரம் பாடத்தின் தேர்வு ஏப்ரல் 24ம் தேதி நடைபெறும் என்றும்,10ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களின் கணிதம் பாடத்தின் தேர்வு ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. 

இதற்கிடையே, கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக சிறுவர்கள், பயிற்சி மைய உரிமையாளர் உட்பட 12 பேரை ஜார்க்கண்ட் போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

no reexam for cbse 10th standard

மேலும்,மறுதேர்வுக்கு எதிராக 10 ஆம் வகுப்பு மாணவர் ரோகன்மேத்யூ உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவரின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இது குறித்த விசாரணை நாளை  நடிபெற இருக்கும் நிலையில், 10 ஆம் வகுப்பு கணித பாடத்திற்கு  மறுதேர்வு கிடையாது என அதிகார பூர்வ தகவல் வெளியாகி உள்ளது....ஆனால் 12 ஆம் வகுப்பு பொருளாதார பாட தேர்வு பற்றி எந்த  அறவிப்பும் இல்லாததால்,அந்த தேர்வு நடைபெறும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios