- Home
- Tamil Nadu News
- ஐயா பாமகவுக்கு தலைவியாகும் ராமதாஸின் 2வது மனைவி..! சுசீலா எண்ட்ரியால் நோகும் வன்னியர் சமூகம்..!
ஐயா பாமகவுக்கு தலைவியாகும் ராமதாஸின் 2வது மனைவி..! சுசீலா எண்ட்ரியால் நோகும் வன்னியர் சமூகம்..!
தன்னுடைய இரண்டாவது மனைவியான சுசீலாவை அரசியலில் அறிமுகப்படுத்தினால் அது அவருக்கு பின்னடைவாக இருக்கும் என வன்னியர் சமூகத்தினர் கருதுகிறார்கள்.

தைலாபுரத்தின் குடும்பச் சண்டை
பாட்டாளி மக்கள் கட்சியை நிறுவியதோடு மட்டுமல்ல, அந்த கட்சியை வளர்த்த ஆளாக்கியவர் மருத்துவர் ராமதாஸ். இதன் பின்னர் அவருடைய வழிகாட்டுதலுடன் மகன் அன்புமணி மிகப் பெரிய அளவில் அரசியல் தலைவராக உருமாறினார். இதனிடையே தந்தை மருத்துவர் ராமதாஸுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு தற்பொழுது பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக உடைந்து, அன்புமணி மிக வேகமாக பயணிக்கிறார். இதன் பின்னணியில குடும்ப சண்டை தான் முக்கிய காரணம் என வெளிப்படையாகவே தெரிய வந்துள்ளது.
ராமதாஸின் சுசீலா பாசம்
மருத்துவர் ராமதாஸ் கிளினிக் நடத்திய போது மருத்துவ உதவியாளராக வேலை பார்த்து வந்தவர் சுசீலா. அந்த வகையில் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய உடல்நிலைக்கு தேவையான உதவிகளை தேவைப்படும்போது சுசீலாவை பயன்படுத்திக் கொண்டார். இதற்கிடையே சுசீலாவை அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல் மறைக்கப்பட்டு குடும்பத்திற்குள் பூசல்களும் நடைபெற்று வந்தன. சுசீலாவுக்கு மாதம் தோறும் மிகப்பெரிய தொகையை வழங்கி வந்ததுடன் ஏராளமான சொத்துக்களையும் அவர் பெயரில் எழுதி வைத்தார் ராமதாஸ்.
40 ஆண்டுகளாக தலை காட்டாத சுசீலா
தற்போது இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்த நிலையில் அன்புமணி ராமதாஸ் போர்க்கொடி தூக்கியுள்ளார். இருந்தபோதும் சுசீலாவை கைவிட முடியாது என்பதில் மருத்துவர் ராமதாஸ் உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில் தான் நாற்பது ஆண்டுகளாக தன்னை வெளிக்காட்டாமல் இருந்து வந்த சுசீலா தற்போது வெளிச்சத்துக்கு வருகிறார். புதிதாக தொடங்கி இருக்கக்கூடிய ஐயா பாமக என்ற கட்சிக்கு அவர்தான் தலைமை தாங்க உள்ளார் என்கிறார்கள். அவருக்கு முக்கிய பொறுப்பு தரப்பட போவதாகவும் பேசப்படுகிறது. இந்த கட்சி குறித்து தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் தற்போது தொடங்கியுள்ளது.
ஐயா பாமவுக்கு சுசீலா தலைமை
ராமதாஸுக்கு வயதாகிவிட்ட நிலையில் அவரால் வேகமாக செயல்பட முடியவில்லை. எனவே முகிலன், சுசீலா போன்றவர்களை முன்னிறுத்த அவர் முடிவு எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவரை மருத்துவர் ராமதாசை பொது மேடை ஒன்றில் அறிமுகப்படுத்துவதற்கும் தயாராகி வருவதாக தெரிகிறது. இதற்கிடையே மருத்துவர் ராமதாஸ் தரப்பிலான பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. மருத்துவர் ராமதாஸ் எடுக்கக்கூடிய முடிவுகளும், நீதிமன்றங்களில் அவர் போராடக்கூடிய வழக்குகளும் தோல்விகளையே சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில் தன்னுடைய இரண்டாவது மனைவியான சுசீலாவை அரசியலில் அறிமுகப்படுத்தினால் அது அவருக்கு பின்னடைவாக இருக்கும் என வன்னியர் சமூகத்தினர் கருதுகிறார்கள். இதுனால சுசீலா அரசியலுக்கு வருவதை வன்னிய சமுதாயத்தினர் விரும்பாத நிலையில் எதிர்ப்புகளை தெரிவிக்க தொடங்கி இருக்கிறார்கள். இருந்தபோதிலும் ஐயா பாட்டாளி மக்கள் கட்சிக்கு சுசீலா தலைமை தாங்கப்போவது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.
