no rank only grade new rule published in tamilnadu twelves exam results

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாணவர்களுக்கான பனிரெண்டாம் வகுப்பு பாட முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன. இதில் ரேங்க் முறையை ஒழித்து சி.பி.எஸ்.சி முறை போல் கிரேடு முறை அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. 
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. 
இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 92.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். 
தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது. 
தேர்வு முடிவுகளில் 1813 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். 
இதில், 292 அரசு பள்ளிகள் முழு தேர்ச்சியை பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவுகளில் மதிப்பெண்கள் அறிவிக்கப்படும், ஆனால் 1,2,3 ஆகிய முறையில் முடிவுகள் வெளிப்படாது எனவும், ரேங்க் முறையை ஒழித்து சி.பி.எஸ்.சி முறை போல் கிரேடு முறை அறிமுகபடுத்தபடும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்திருந்தார். 


அதுபோல், தற்போது கிரேடு முறை அறிமுகபடுத்துள்ளது. 
1180 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு ஏ கிரேடு அளிக்கப்படுகிறது. 1151 மதிப்பெண்கள் முதல் 1180 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு பி கிரேடு அளிக்கப்படுகிறது. 
1126 முதல் 1150 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு சி கிரேடு அளிக்கப்படுகிறது. 
1100 முதல் 1126 வரை பெற்றவர்களுக்கு டி கிரேடு அளிக்கப்படுகிறது. 
1001 முதல் 1100 வரை பெற்றவர்களுக்கு இ கிரேடு அளிக்கப்படுகிறது.
1180 மதிப்பெண்ணுக்கு அதிகமாக பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 1171.
1151 முதல் 1180 வரை உள்ள மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 12283. 
1126 முதல் 1150 வரை உள்ள மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 14806.