கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் யாருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

No one in Tamil Nadu experienced any side effects from COVISHIELD vaccine smp

கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல், ரத்தத் திட்டுகள் குறைவு போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம் என அந்த தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளவுகளும் ஏற்படுவதாக சுமார் 51 பேர் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், பிரிட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில் 'COVISHIELD' தடுப்பூசி, மிக அரிதாக TTS என்ற ரத்த உறைதல் பக்க விளைவை ஏற்படுத்தும் என்று AstraZeneca கூறியுள்ளது.

இந்தியாவில் சுமார் 174.94 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என அந்த தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராஜெனெகா இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பலரும் தங்களுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற பீதியில் உள்ளனர்.

இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் யாருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பதவியை ஏன் ராஜினாமா செய்யவில்லை: அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்!

கோயம்பேட்டில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “எந்த தடுப்பூசியாக இருந்தாலும் ஒருவருடைய உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்துத்தான் இருக்கும். கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் யாருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்பட வில்லை. யாரும் பதற்றத்துடன் இருக்க வேண்டாம். உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்து உடலை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும்.” என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios