முதல்வர் பதவியை ஏன் ராஜினாமா செய்யவில்லை: அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்!

பாஜக அழுத்தம் கொடுத்தும் தான் ஏன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் வெளிப்படுத்தினார்

Why i did not resign chief minister post despite BJP pressure Arvind Kejriwal Reveals smp

டெல்லியில் தற்போது ரத்து செய்யப்பட்ட மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்தது. இந்த வழக்கில் தன்னுடைய கைதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் ஜெக்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. ஜூன் 2ஆம் தேதி அவர் சரணடையுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி திகார் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதுமே அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக தரப்பில் கடுமையான கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இந்த நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், தாம் ஏன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “எனக்கு முதல்வர் பதவி முக்கியமில்லை. பொய் வழக்கில் என்னை ராஜினாமா செய்ய சதி செய்யப்பட்டதால் நான் முதல்வர் பதவியில் இருந்து விலகவில்லை.” என விளக்கம் அளித்துள்ளார்.

3ஆம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு

ஊழலுக்கு எதிராகப் போராடுவதைப் பற்றி பிரதமர் கற்றுக்கொள்ள விரும்பினால், அவர் அரவிந்த் கெஜ்ரிவாலிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்பினோம், எங்கள் சொந்த அமைச்சர்களையும் கூட அனுப்பினோம் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதம் தெரிவித்தார்.

எங்களை சிறைக்கு அனுப்பிவிட்டு, நீங்கள் வெற்றி பெற முடியாது என்ற அவர், “ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் தொடங்கி உள்ளோம். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவோம். எல்லா கட்சிகளையும் அழித்துவிட பாஜக நினைக்கிறது. ஆம் ஆத்மி கட்சியை அழிக்க முடியாது என்பதற்கு இங்கு திரண்டுள்ள தொண்டர்களே சாட்சி.” என்றார்.

ஆம் ஆத்மி கட்சியை பிரதமர் மோடி நசுக்க நினைக்கிறார் என குற்றம் சாட்டிய அரவிந்த் கெஜ்ரிவால், ஆம்ஆத்மி கட்சியை வீழ்த்த முடியாமல் 4 தலைவர்களை பிரதமர் மோடி சிறையில்  அடைத்தார். கடந்த 75 ஆண்டுகளில் ஆம்ஆத்மி போல் எந்த கட்சிக்கும் தொல்லை  கொடுக்கப்பட்டது இல்லை என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios