no need pan no and adhar number to buy gold
நகை வாங்க பான்,ஆதார் தேவை இல்லை..! கருணை காட்டிய மத்திய அரசு..!
ஜிஎஸ்டி கவுன்சிலின் 22வது கூட்டம் டெல்லியில் அருண்ஜெட்லி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் பல முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.அதில் குறிப்பாக பெட்ரோல், டீசல்,தங்கம்,வைரம் மீதான வரி விதிப்பு என அனைத்தும் அடங்கும்.
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக ரூபாய் நோட்டு செல்லாது என பிரதமர் அறிவித்த பின்னர், அனைத்து துறையும் ஆட்டம் கண்டது. பின்னர் ஒவ்வொரு துறையிலும் ஊழல் ஒழிக்க மத்திய அரசு பல நடவடிக்கை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதி தான்,வரி விதிப்பு. அதாவது ஜிஎஸ்டி.நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு கொண்டுவரப்பட்டது.அதில் தங்கமும் அடங்கும்.
மேலும் ஒவ்வொருவரின் தனி வருமானம் முதல் அனைத்தும் தெரிந்துக்கொள்ள,ஆதார் எண்ணை,பான் கார்டு முதல் வங்கி,ரேஷன் கார்டு என அனைத்திலும் இணைக்கப்பட்டு வருகிறது.
பின்னர் நகை வாங்கினாலும்,ஆதார்,பான் கார்டு தேவை என்ற விதி அமலுக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்
இந்நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று, இன்று நடைப்பெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலில் தங்கம் வாங்குவது குறித்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது
சட்ட விரோத பண பரிமாற்ற சட்டவரம்பிலிருந்து நகை,வைர நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
அதில்,ரூ.50 ஆயிரத்திற்குள் நகை வாங்கினால் பான், ஆதார் தேவை இல்லை என்றும்,ரூ.2 கோடிக்கும் மேல் வர்த்தகம் செய்வது பி.எம்.எல் சட்ட வரம்பில் வராது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.அதாவது ரூ. 50 ஆயிரத்திற்குள் நகை வாங்கும் போது எந்த பிரச்னையும் இல்லை. பான் எண்ணும் தேவை இல்லை...ஆதார் எண்ணும் தேவை இல்லை
இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
