no loan cancel for whose having more than 5 acres
தமிழகத்தில் அனைத்து விவசாயிகளின் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்து சென்னை மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கூட்டுறவு வங்கிகள் உட்பட பல்வேறு வங்கிகளில் கடன் பெற்ற சிறு-குறு விவசாயிகளின் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு உத்தரவிட்டது.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களை அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கைகளை ஏற்று அனைத்து விவசாயிகளின் கடன்களையும்தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
5 ஏக்கருக்குமேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் 4 வாரத்திற்குள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
