Asianet News TamilAsianet News Tamil

அம்மா உணவகங்களை மூடும் எண்ணம் இல்லை - அமைச்சர் நேரு திட்டவட்டம்

தமிழகத்தில் செயல்பாட்டில் இருக்கும் அம்மா உணவகங்களை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் கே.என்.நேரு, அதிக அளவில் உள்ள பணியாளர்களை சுழற்சி முறையில் பணியமர்த்தும் நடவடிக்கைகள் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

no idea about amma unavagam closing  says minister kn nehru
Author
First Published Jan 14, 2023, 7:06 PM IST

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, குப்பைகளை சேகரிக்கும் இடங்களிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரத்து சேகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேலத்தில் குப்பைகளே இல்லை என்ற நோக்கில் பணியாற்றி வருகிறோம். தமிழகம் முழுவதும் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றிவிட்டு அவ்விடங்களில் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

தற்போது 300 ஏக்கராக இருந்த குப்பை மேடுகள் 150 ஏக்கராக குறைக்கப்பட்டு அப்பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குப்பைகளை சேகரிக்கும் இடங்களிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கி பின்னர் மக்காத குப்பைகளை தொழிற்சாலைகளுக்கும், மக்கும் குப்பைகளை உரமாக்கி பின்னர் அதை மீண்டும் மக்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாஜகவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடைபயணம்; தனி நபராக களம் இறங்கும் காயத்ரி ரகுராம்

பாதாள சாக்கடை திட்டம் மூலம் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து அவற்றை பயன்படுத்தவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இத்திட்டத்திற்கு இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் நல்ல பலன் கிடைக்கும் என்றார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கும் தேவையான நிதியை முதல்வர் ஒதுக்கி உள்ளார்.

பழனி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க முன்பதிவு விவரங்கள் வெளியீடு

அம்மா உணவகங்களை மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் இருப்பதால் அவர்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபட மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios