Asianet News TamilAsianet News Tamil

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு இல்லை – கைவிரித்த மத்திய அரசு...

No exemption for tamilnadu in NEET exam
no exemption-for-tamilnadu-in-neet-exam
Author
First Published May 16, 2017, 2:09 PM IST


நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க இயலாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பு படிக்க நீட் தேர்வு என்ற முறையை மத்திய அரசு அறிமுகபடுத்தியது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

ஆனால் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி கடந்த 7 ஆம் தேதி நீட் தேர்வை நடத்தி முடித்தது மத்திய அரசு.

இதனிடையே நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி பல்வேறு தரப்பிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மாணவர்களின் இந்த போராட்டத்தை சமாளிக்க சுகாதாரத்துறை அமைச்சரும், சுகாதாரத்துறை செயலாளரும் மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என பேட்டி அளித்து வந்தனர்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்றும், மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து ஏற்கனவே தமிழக அரசிடம் தெரிவித்து விட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு படி நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளதால் மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது எனவும், அவர் குறிபிட்டுள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios