கொரோனா 3ம் அலைக்கு சான்ஸ் இருக்கா? இல்லையா…? மா. சுப்ரமணியன் பதில்
கொரோனா 3ம் அலைக்கு வாய்ப்பு இல்லை என்று சுகாதார அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா 3ம் அலைக்கு வாய்ப்பு இல்லை என்று சுகாதார அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றுகள் பதிவாகி வந்த தமிழகத்தில் இன்று நாள் தினமும் 1500க்கும் கீழாகவே பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் முடுக்கிவிடப்பட்டு சரியான பாதையில் அவற்றை செயல்படுத்தியதால் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாக மக்கள் கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில் தமிழகத்தில் 3ம் அலைக்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந் நிலையில் கொரோனா 3ம் அலைக்கு வாய்ப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கரூரில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்ட துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய போது இதை கூறினார். தொடர்ந்து அவர் கூறியிருப்பதாவது: நாட்டில் அதிகமான கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பது தமிழகம் தான். அனைவரும் பயன்படும் வகையில் கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா 3வது அலைக்கு வாய்ப்பில்லை. தினசரி பரிசோதிக்கப்படும் கொரோனா மாதிரிகளில் 1 சதவீதம் பேருக்கு தான் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது என்று அவர் கூறினார்.