சாமியார் நித்தியானந்தா!!!

இவர் பெயரை கேட்டாலே பலருக்கு கிளுகிளுப்புதான். மற்ற பிரிவினருக்கோ நித்தியானந்தா பேரை கேட்டால் சர்ச்சைதான்.

வர்தா புயல், மோடியின் பண ஒழிப்பு பிரச்சனை, தண்ணீர் பற்றாக்குறையால் நாடே தத்தளிப்பது என ஊரே ரெண்டு பட்டாலும், எபோதும் போல யார் எப்படிபோனால் எனக்கென்ன… என் வழி தனி வழி…என குஜால் மஜாலாக இருக்கிறார் நித்தியானந்தா.

முன்பெல்லாம், மொழு மொழுவென மழிக்கப்பட்ட முகத்துடனும், டிரேட் மார்க் சிரிப்புடனும் பல்லை காட்டி கொண்டு போஸ் கொடுப்பார் நித்தியானந்தா.

ஆனால், தற்போதோ, நீண்ட ஜடாமுடி, மற்றும் பல நாள் வளர்த்த தாடி மற்றும் மீசையுடன் கம்பீரமாக மேன்லியான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்.

முன்பு இருந்த நித்திக்கும், தற்போதைய நித்திக்கும் முற்றிலுமாக அடையாளம் தெரியாதபடி மாறித்தான் போயுள்ளார்.

எது எப்படியோ, ராமன் ஆண்டால் என்ன..? ராவணன் ஆண்டால் என்ன..? நித்திக்கு எதை பற்றியும் கவலை இல்லை.