Asianet News TamilAsianet News Tamil

Night curfew cancelled: இரவுநேர ஊரடங்கு ரத்து... ஞாயிறு முழு ஊரடங்கும் இல்லை... அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!!

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலிம் அறிவித்துள்ளார். 

night curfew cancelled from tomorrow and no full lockdown on sunday says cm stalin
Author
Tamilnadu, First Published Jan 27, 2022, 8:24 PM IST

Sunday lockdown cancelled in Tamilnadu: தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலிம் அறிவித்துள்ளார். இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது.  பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும். கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து மற்ற அனைத்து கல்லூரிகளும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி. நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 30 ஆம் தேதி அன்று முழு ஊரடங்கு கிடையாது. சமுதாய,கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும். மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை. பொருட்காட்சிகள், அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி இல்லை. உணவகம், விடுதிகள், பேக்கரிகள், அடுமனைகளில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவருந்த அனுமதி. திருமணம் அதைச் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சமாக 100 பேருக்கு மட்டும் அனுமதி. இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிகபட்சமாக 50 பேருக்கு மட்டுமே அனுமதி. சினிமா தியேட்டர் கட்டுப்பாடு தொடரும். சினிமா தியேட்டர்களில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 50 சதவிகித பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி.

night curfew cancelled from tomorrow and no full lockdown on sunday says cm stalin

துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். கேளிக்கை விடுதி, உடற்பயிற்சி கூடங்களில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி. அழகு நிலையங்கள்,முடித்திருத்தகங்கள் ஒரே நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி. கொரோனா தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி வரை நீடிப்பு. உணவகம், விடுதிகள், பேக்கரிகள், அடுமனைகளில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவருந்த அனுமதி. திருமணம் அதைச் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சமாக 100 பேருக்கு மட்டும் அனுமதி. இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிகபட்சமாக 50 பேருக்கு மட்டுமே அனுமதி. சினிமா தியேட்டர் கட்டுப்பாடு தொடரும். சினிமா தியேட்டர்களில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 50 சதவிகித பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி. துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

night curfew cancelled from tomorrow and no full lockdown on sunday says cm stalin

கேளிக்கை விடுதி, உடற்பயிற்சி கூடங்களில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி. அழகு நிலையங்கள்,முடித்திருத்தகங்கள் ஒரே நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி. பொழுது போக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி. அரசு மற்றும் தனியார் பல்கலை கழகங்கள், கல்லூரிகள், தொழிற் பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் பிப்.1 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி. உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை நாடகம், போன்ற நிகழ்ச்சிகள் 50 சதவிகித பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி. பொழுது போக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios