சென்னை, நெல்லை உள்பட 8 மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை
25க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். கோவை உக்கடம் பகுதியில் அபிபுல் ரகுமான் என்பவர் வீட்டிலும் நெல்லை ஏர்வாடியில் பக்ரூதின் அலி என்பவர் வீட்டிலும் என்.ஐ.ஏ சோதனை நடைபெறுதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
சென்னை, நெல்லை, கோவை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இந்தச் சோதனை நடைபெறுகிறது.
25க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். கோவை உக்கடம் பகுதியில் அபிபுல் ரகுமான் என்பவர் வீட்டிலும் நெல்லை ஏர்வாடியில் பக்ரூதின் அலி என்பவர் வீட்டிலும் என்.ஐ.ஏ சோதனை நடைபெறுதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு நிதி வசூல், மூளைச்சலவை, உபகரணங்கள் அளித்தது போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இந்தச் சோதனை நடைபெறுகிறது.
கோவை கார் வெடிப்பு வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திரா அருகே சுற்றாலாப் பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி; 15 பேர் படுகாயம்