நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டில் என்ஐஏ திடீர் சோதனை..! அதிர்ச்சியில் சீமான் ..! என்ன காரணம் தெரியுமா??
விடுதலை புலிகள் அமைப்போடு தொடர்பு இருப்பதாக கூறி தேசிய புலானாய்வு பிரிவு அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டில் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஎப்ஐ அலுவலகத்தில் சோதனை
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாகவும், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் 23 மாநிலங்களில் உள்ள பிஎப்ஐ அமைப்பிற்கு சொந்தமான இடங்களில் தேசிய புலானாய்வு அமைப்பு சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது அந்த அமைப்பை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இந்த சம்பவத்தையடுத்து பிஎப்ஐ அமைப்பிற்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது. இதற்க்கு விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டில் இன்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போண்டாமணிக்கு உதவி செய்வது போல் நடித்து ஒரு லட்சம் மோசடி..! மர்ம நபரை தட்டி தூக்கிய போலீஸ்
நாம் தமிழர் நிர்வாகி வீட்டில் சோதனை
சிவகங்கை கல்லூரி சாலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி விக்னேஸ்வரன் வீடு அமைந்துள்ளது. இன்று காலை 6 மணி அளவில் தேசிய புலனாய் துறையை சேர்ந்த 3 அதிகாரிகள் விக்னேஸ்வரன் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். ஓட்டுனராக பணிபுரியும் விக்னேஸ்வரன் விடுதலை புலி இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. விக்னேஸ்வரனிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் வீட்டில் இருந்த விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் புகைப்படம் மற்றும் புத்தகங்கள் கையேடுகளை கைப்பற்றினர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இச்சோதனை 8 மணியளவில் நிறைவு பெற்றுது. சோதனையில் சில முக்கிய ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். பிஎப்ஐ அமைப்பினர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய பரபரப்பு அடங்குவதற்குள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டில் தேசிய புலானய்வு அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்