சென்னையில் இருந்து அடுத்த மாதம் முதல் சேலம், புதுச்சேரிக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது. அக்டோபர் மாதத்தில் இருந்து நெய்வேலிக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

மத்திய அரசின் மண்டலங்கள இணைக்கும் திட்டத்தின் மூலம் இந்த சிறுநகரங்களுக்கு இடையிலான விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது.  மத்திய, மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய திட்டங்களை இதில் செயல்படுத்த காத்திருக்கின்றன.

இது குறித்து தமிழக அரசின் போக்குவரத்து துறைியின் கூடுதல் தலைமைச் செயலாளர் பி.டபிள்யு. சி. டேவிட் கூறுகையில், “

செப்டம்பர் மாதத்தில் இருந்து சென்னையில் இருந்து புதுச்சேரி மற்றும் சேலம் நகரங்களுக்கு இடையே விமானப் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.

சிறு நகரங்களுக்கு இடையிலான விமானப் போக்குவரத்து தொடங்கியபின், விமானப் போக்குவரத்தில் பெரிய புரட்சியை உண்டாக்கும், அதிகமான மக்கள் பயணிக்க விரும்புவார்கள். நெய்லவேலி, சேலம் விமானநிலையங்களில் பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. ஓசூர் விமானநிலையத்துக்கு ஒப்புதல் பெற வேண்டி இருக்கிறது. தனியார் விமானநிலையம் என்பதால் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.

இது குறித்து இந்திய விமானநிலைய ஆணையத்தின் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ அக்டோபர் மாத இறுதிக்குள் சென்னை முதல் நெய்வேலிக்கு விமானப் போக்குவரத்து தொடங்கிவிடும். இந்த நகரங்களுக்கு இடையிலான விமானக் கட்டணம் அதிகபட்சமாக ரூ.2500 வரை இருக்கும்’’ எனத் தெரிவித்தனர். 

மண்டலங்களை இணைக்கும் இந்த விமானத்திட்டங்களை செயல்படுத்த, மத்திய அரசு ரூ.4500 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கு ஏற்றார்போல் மாநில அரசும், தேவையான உதவிகளை செய்து வருகிறது.  குறிப்பாக தூத்துக்குடி விமானநிலைய விரிவாக்கத்துக்கு தமிழக அரசு சார்பில் 366 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், திருச்சி, மதுரை விமான நிலையங்களும் அடுத்து வருகின்ற மாதங்களில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. இந்த திட்டத்தில் மாநில அரசு , நிலம், கட்டமைப்பு வசதிகளை இலவசமாக அளிக்க வேண்டும். பாதுகாப்பு வசதிகள், தீயணைப்புவசதிகள் ஆகியவற்றை விமானநிலையத்துக்கு கட்டணமின்றி மாநில அரசு சார்பில் அளிக்கப்பட வேண்டும். 

இதில் நெய்வேலி நகருக்கு ஏர் ஒடிசா நிறுவனத்தின் விமானமும், ஓசூருக்குவி.ஜி.எப்.  நிறுவனத்தின விமானமும் இயக்கப்பட உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.