உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று நள்ளிரவு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பொதுமக்கள் திரண்டனர். அதிகாலை 1 மணியளவில் அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆதராதனை நடந்தது.

இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு சென்ற சுவாமி தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து இன்று மாலை வரை சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

சென்னையில் வடபழனி முருகன் கோவில், திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயில், பாரிமுனை தம்பு செட்டி தெரு காளிகாம்பால் கோயில், கந்தகோட்டம் உள்பட பல கோயில்களில்  அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் நின்று, புத்தாண்டு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டி சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பெண்கள் நெய் விளக்கேற்றி வழிபட்டனர்.

அதேபோல் திருப்பதி தேவஸ்தான கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று, பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்பட்டன.