- Home
- Politics
- ரூ.1020 கோடி ஊழல்... உத்தரவு பிறப்பித்த அரசு... தலைகீழாக மாறும் கே.என்.நேருவின் அரசியல் களம்..?!
ரூ.1020 கோடி ஊழல்... உத்தரவு பிறப்பித்த அரசு... தலைகீழாக மாறும் கே.என்.நேருவின் அரசியல் களம்..?!
அமைச்சர் கே.என்.நேரு இதன் மூலம் விரைவில் கண்டிப்பாக அமைச்சர் கைதாகலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அமித்ஷா தமிழகம் வந்து சென்றிருக்கும் நிலையில் இந்த வழக்கு சூடு பிடித்திருக்கிறது.

1020 கோடி ரூபாய் உழல்
தற்போது தமிழகத்தை சுழன்றடிக்கப் போகும் அரசியல் கைது விரைவில் நடைபெறலாம் என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.இதில் கோபாலபுரம் வரை புயல் வீச கூடும் எனவும் தகவல்கள் வெளிவருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 1020 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பையே ஏற்படுத்தியது.
அமலாக்கத்துறை கடிதம்
தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் இடங்களில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட சோதனைகளில் கிடைத்த டிஜிட்டல் ஆதாரங்களை வைத்து ஊழலை உறுதிப்படுத்தியது அமலாக்கத்துறை. மேலும் பதிவு செய்யப்பட்ட பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்க அது வழி வகுக்கும் என்றும், அதன் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக அமைச்சர் கே.என்.நேருவின் கட்டுப்பாட்டில் உள்ள குடிநீர் வழங்கல் துறையில் பெரும் மோசடி நடந்ததாக அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு இரண்டு முறை கடிதம் எழுதி உள்ளது.
அதில் நகராட்சி நிர்வாக துறையின் பணிகளை ஒதுக்குவதில் 7.5% முதல் 10 சதவீதம் வரை அமைச்சர் கே.என்.நேருவின் கூட்டாளிகளுக்கு லஞ்சமாக செலுத்தியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது. நகராட்சி நிர்வாக ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சங்கள் வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமைச்சர் கூட்டாளிகளின் தொலைபேசிகளில் இருந்து பெறப்பட்ட செய்திகள், உரையாடல்கள் அல்லது கணக்கீட்டு தாள்களின் அடிப்படையில் மொத்தம் ஆயிரத்து ரூ.1020 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான நேரடி ஆதாரம் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
கழிப்பறைகள், துப்புரவு தொழிலாளர்களை அவுட் சோர்சிங் செய்த நபார்டு திட்டங்கள், துப்புரவாளார் குடியிருப்புகள், கிராம சாலைகள், நீர் நிலைகள், ஏரி என கிட்டத்தட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்தில் இருந்தும் லஞ்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. லஞ்சப்பணம் பின்னர் நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் ஹவாலா வடிவமைப்புகள் மூலம் மாற்றப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அதிமுக எம்.பி., இன்பதுரை அமைச்சர், நேருவுக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் அமைச்சர் கே.என்.நேருக்கு சிக்கல்..?
அவர் தனது மனுவில் கடந்த டிசம்பர் 13ம் தேதி அன்று லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறைக்கு அளிக்கப்பட்ட புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும், மாநில அரசு அல்லது டிவிஏசி வழக்கு பதிவு செய்ய தயங்குவதால் நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு உத்தரவிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் தான் தமிழக அரசு, அமலாக்க இயக்குனரகம் எழுப்பிய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிகாரபூர்வ விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவை சார்ந்ததாக கூறப்படும் இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.
ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் மற்றும் ஒரு துறை வேலை வாய்ப்பு ஆட்சேர்ப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக சில ஆவணங்களை அமலாக்கத்துடைய இயக்குனரகம் இணைத்துள்ளது. இதன் மூலம் விரைவில் கண்டிப்பாக அமைச்சர் கைதாகலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அமித்ஷா தமிழகம் வந்து சென்றிருக்கும் நிலையில் இந்த வழக்கு சூடு பிடித்திருக்கிறது.
