1200 வருடங்கள் பழமை வாய்ந்த சுரங்கம் கண்டுபிடிப்பு...நெய்வேலில் கண்டெடுத்த பொக்கிஷம்...

நெய்வேலி நிலக்கரி படுகைக்கு அடியில் இருந்த பண்டைய காலத்தின் சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி உருவாக வேண்டும் என்றால், குறைந்தபட்சம் 1200 வருடங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, நிலக்கரி என்பது இயற்க்கை சீற்றங்களில் சிக்கிய மரங்கள் மற்றும் கழிவுகளில் இருந்து கிடைக்க உருவாக கூடியது. இதற்காக குறைந்தபட்சமாக 1200 வருடங்கள் ஆகும்.

இந்நிலையில் இதற்கும் முன்னதாக, சுரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளதால், கிட்டத்தட்ட2500 வருடங்கள் பழமையானதாக  இருக்கும் என கணிக்கப்படுகிறது.

சுரங்கம் கண்ணில் பட்டது எப்படி ?   

நிலக்கரியை தோண்டும் பணியில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கங்கள், சுடுமணல் கற்கள் கொண்டுள்ளதாகவும்  ஒரு மீட்டர் அகலத்தில் உள்ள இதில், செங்கற்கற்களை அடுக்கி வைத்து, மரப்பலகைகளும்  இணைக்கப்பட்டுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சுரங்கமானது பூமியை நோக்கி பல அடிக்கு நீண்டு தண்ணீரில் மூழ்கி செல்வதாக உள்ளது  என  தெரிவித்துள்ளனர். இந்த தகவலை தொல்லியில் துறைக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது கண்டறியப்பட்ட இந்த சுரங்கம் குறித்த முழு விவரமும் தொல்லியல் துறை மேற்கொள்ளும்   ஆராய்ச்சிக்கு பின்னர் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.