சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள 3 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்கின்றனர். இதனால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலாளராக இருக்கும் திரு. டீக்காராம், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை பதிவாளராக இருக்கும் திரு. என்.சதீஷ்குமார், சேலம் மாவட்ட முதன்மை நீதிபதியாக இருக்கும் திரு. எஸ்.என். சேஷசாயி ஆகியோர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 3 பேரும் இன்று பதவியேற்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
