கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்த சர்ச்சைகள்… சவால்கள்…!!!

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த கரன் சின்ஹா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகரத்தின்  காவல்துறை ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ள ஏ.கே.விஸ்வநாதன், 1990ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.

இவர், சென்னையில் பணியாற்றியபோது பல சர்ச்சைகளில் சிக்கினார். கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலில் பங்கேற்று, பல வழக்கறிஞர்கள் படுகாயமடைய காரணமாக இருந்தார் என புகார் எழுந்தது.

ஆனால் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலுக்கு அப்போதைய கமிஷனர் ராதாகிருஷ்ணன்தான் பொறுப்பு எனகூறி, ஏ.கே.விஸ்வநாதன் வாதிட்டார்.

இதனால் ஏ.கே.விஸ்வநாதனுக்கும் பல போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையே பனிப்போர் மூண்டது.

இதையடுத்து, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஏ.கே.விஸ்வநாதன், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் செயலாளராக நியமிக்கப்படுவதாக பேச்சு எழுந்தது.

ஆனால், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு அவர் சிறப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார்.

மத்திய அமைச்சர்களின் அனைத்து செயலாளர்களின் நியமனங்களுக்கும் ஒப்புதல் தரும் பிரதமரிடம், விஸ்வநாதன் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வந்தது. இதையடுத்து, அவரது நியமனத்துக்குகு தடை விதித்தாக கூறப்படுகின்றது.