new change in deposit the money
வங்கிகளில் ரொக்கமாக பணம் டெபாசிட் செய்வதில் புதிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஐம்பது ஆயிரத்திற்கும் மேலாக ரொக்கமாக வங்கிகளில் டெபாசிட் செய்தால், கண்டிப்பாக பான் எண் மற்றும் ஒரிஜினல் ஐடி கார்டு சரிபார்க்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை காரணமாக,பழைய ரூபாய் நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.
அதனை தொடர்ந்து அனைத்திலும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், 50 ஆயிரத்திற்கும் மேலாக ரொக்க பணமாக வங்கி கணக்கில் டெபாசிட் செய்பவர்களின் கணக்குகள் சரிபார்க்கப்படுகிறது.
இதன் மூலமாக பணம் எங்கிருந்து வந்தது,திடீரென ரொக்கப்பணம் கிடைத்ததற்கான ஆதாரம் அனைத்தும் அறிய முடியும்.இந்த அனைத்து நடவடிக்கையும் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு இதழில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
