நெல்லை அருகே அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மாணவர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் இரு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சம்பவ நேரத்தில் பணியில் இருந்து உரிய நடவடிக்கை எடுக்காததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை அருகே அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மாணவர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் இரு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சம்பவ நேரத்தில் பணியில் இருந்து உரிய நடவடிக்கை எடுக்காததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நெல்லை மாவட்டம், அம்பை அருகே பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில், கையில் கயிறு கட்டுவது தொடர்பான பிரச்னையில், கடந்த 25ம் தேதி பிளஸ்2, பிளஸ்1 மாணவர்கள் இரு தரப்பினருக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த சண்டையில், பிளஸ் 2 மாணவன் செல்வசூர்யா என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து மாணவனின் உடலை வாங்க மறுத்து பெற்றோகள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவனின் குடும்பத்துக்கு நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து நெல்லை ஆர்.டி.ஓ சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உறுதியளித்த பின் உடலை பெற்றுக்கொண்டனர்.

மாணவன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக பாப்பாக்குடி போலீசார் 3 மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே பதற்றம் காரணமாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தற்போது, மோதலில் மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் அந்த பள்ளியின் பணிபுரியும் இரு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பள்ளக்கால் புதுக்குடி கிராம மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஷீபா பாக்கியமேரி , தமிழ்செல்வன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.மேலும் சம்பவ நேரத்தில் பணியில் இருந்து உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக உத்தரவிடப்பட்டுள்ளது.
