யார் நெல்லை மாநகராட்சியை கைப்பற்றுவது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி நெல்லை மாநகராட்சியில் 19 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.. அதன் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் இதோ உங்களுக்காக.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. நெல்லை மாநகராட்சியை எந்தக் கட்சி கைப்பற்றி வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

நெல்லையில் மேயர் பதவியை பொறுத்தவரை நெல்லை மாநகராட்சி இதுவரை 4 பொதுத்தேர்தலையும், 1 இடைத்தேர்தலையும் சந்தித்து உள்ளது, இதில் 3 முறை அதிமுகவும், 2 முறை திமுகவும் ஆட்சி புரிந்து உள்ளது. 1996 மற்றும் 2001 தேர்தலில் பட்டியலின பெண்களுக்கான தொகுதியாக இருந்தது, அப்போது மக்கள் நேரடியாக மேயரை தேர்ந்தெடுத்தனர், அதன் பின்னர் பொது ஆண் தொகுதியாக மாற்றப்பட்டு மறைமுக மேயர் தேர்தல் கொண்டு வரப்பட்டது,

நெல்லை மாநகராட்சியை பொறுத்தவரை யாதவர் மற்றும் பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர்களே அதிகம் என்பதால் அந்த அடிப்படையில் தான் வாய்ப்புகளும் வழங்கப்படும், பொது ஆண் வார்டாக மாறிய பின்னர் அவர்களுக்கே வாய்ப்புகளும் வழங்கப்பட்டது. 

8 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த தேர்தலில் பொது வார்டாக மாற்றப்பட்டு உள்ளது, பொது என்பதால் பிள்ளைமார் மற்றும் யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கே இந்த முறையும் வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆளுங்கட்சி என்பதால் திமுகவே இந்த ஆண்டு நெல்லை மாநகர மேயர் பதவியை கைப்பற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

எனவே இந்தமுறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நெல்லை பகுதி வாக்காளர்கள் யாருக்கு ஆதரவு தரப் போகின்றனர் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி நெல்லை மாநகராட்சியில் 19 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அவற்றின் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் அறிந்துகொள்ள ஏசியாநெட் தமிழை தொடர்ந்து படியுங்கள்.