neet exam updated

தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான 'நீட் தேர்வு' இன்று நடைபெற்றது, 88,000 மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.

மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த தேர்வு 10 மணிக்கு துவங்கி 1 மணிக்கு முடிவடைந்தது.

தேர்வு எழுதும் மாணவர்கள், எந்த பொருட்களையும் எடுத்துக்கொண்டு செல்ல அனுமதிக்கப்பவில்லை. பெண்கள் புடவைகள், ஹேர் பேண்ட், நகைகள் அணிந்து செல்வதற்கும் தடைகள் விதிக்கப்பட்டன.

அதே போல் அணைத்து மாணவ மாணவிகளும் ஆதார் அட்டை காண்பித்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

நீட் தேர்வு முடித்து விட்டு வெளியே வந்த மாணவர்கள், நம்மிடம் கூறுகையில் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாகவும், நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்ததாக கூறினார்.

அதே போல் நீட் தேர்வு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட வில்லை என்றும் தேர்வு முடிந்த பின்,மாணவ மாணவிகள் முண்டியடித்து கொண்டு, ஒருவரை ஒருவர் தள்ளி விட்டுக்கொண்டு வெளியே வரும் சூழல் உண்டானதாக குற்றம் சாட்டினர்.

ஒரு சில பெற்றோர்கள், தேர்வு எழுத சென்ற தங்களுடைய பிள்ளைகள் நீண்ட நேரமாகியும் திரும்ப வராததால் கதறி அழ ஆரமித்தனர். 

தேர்வு மையத்தில் இருந்து வெளியே வர பாதை இல்லாததாலும், கூட்ட நெரிசலாலும் வெளியே வர பலமணிநேரம் ஆனதாக மாணவ மாணவிகள் கூறினார்.