Asianet News TamilAsianet News Tamil

நவ சமாஜ் சேரிட்டபிள் சொசைட்டி.. சிறப்பாக நடந்த மாவட்ட கிளை துவக்க விழா- நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

சென்னை செம்மஞ்சேரி அம்ரோசியா அப்பார்ட்மெண்ட் அரங்கில், நவ சமாஜ் சேரிட்டபிள் சொசைட்டியின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்ட கிளை துவக்க விழா இன்று நடைபெற்றது

Nava Samaj Charitable Society branch opening ceremony held in chennai ans
Author
First Published Oct 6, 2023, 5:03 PM IST

நவசமாஜ் மாநிலத் தலைவர், பேராசிரியர் டாக்டர். அன்பானந்தம் இந்த விழாவிற்கு தலைமை வகித்தார். நவ சமாஜ் சேரிட்டபிள் சொசைட்டியின் தேசிய பொதுச்செயலாளர் திரு. சூரிய நாராயணன், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சவிதானந்தநாத் சுவாமிஜி, ஹெரிடேஜ் ஹாஸ்பிடல் நிறுவனர் டாக்டர். ராமலிங்கம், தொழில் அதிபர் திரு.பன்வார், டாக்டர் தமிழரசன், ஓய்வு பெற்ற நீதிபதி திரு .ஜீவானந்தம், அமைப்பு செயலாளர் திரு. பாலச்சந்தர், டாக்டர் பாலமுரளி, மாநில இணைச் செயலாளர் அரிமா .மு. மதிவாணன், விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சென்னை மாவட்ட தலைவர் திரு.முருகன் நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்று பேசினார். அப்போது நவ சமாஜ் சேரிட்டபிள் சொசைட்டியின் நோக்கத்தையும் செயல்பாடுகளையும் உலகறிய செய்ய navsamajindia.org என்ற web portalஐ உருவாக்கிய பொறியாளர் திரு. அருண்குமாருக்கு அனைவராலும் நன்றி தெரிவிக்கப்பட்டது. 

திமுக ஆட்சியில் கோவில் சொத்து.. ஆதீனம் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு - அண்ணாமலை போட்ட சபதம் !!

இந்த விழாவில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட தலைவர், செயலாளர் , பொருளாலர், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். மேலும் விழாவில், மாநில பொறுப்பாளர்கள், திருமதி. தேன்மொழி, திருமதி. கலைச்செல்வி, மாநில செய்தி தொடர்பாளர் கே.என். வடிவேல், சென்னை நிர்வாகிகள் திரு. சண்முகராஜன்,  திரு.ராம்குமார்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

விழாவுக்கு வருகை தந்தவர்களுக்கு சென்னை மாவட்டச் செயலாளர் திரு.பழனி நன்றி கூறினார், விழாவில், சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் இரத்ததானம் செய்வது, ஏழை எளிய குழந்தைகள் கல்வி பெற உதவி செய்வது, சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்ட தலைவர்களின் புகழை பரப்புவது, தொழில் அதிபர்களை உருவாக்குவது, சுற்றுச்சூழலை பாகாப்பது,  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை..! எந்த மாவட்டங்கள்.? எப்போ தெரியுமா.? வானிலை மையம் தகவல்

Follow Us:
Download App:
  • android
  • ios