நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கான முதல் பரிசை உத்தரப்பிரதேசமும், இரண்டாவது பரிசை ராஜஸ்தானும், மூன்றாவது பரிசை தமிழ்நாடும் பெற்றுள்ளன. 

நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கான முதல் பரிசை உத்தரப்பிரதேசமும், இரண்டாவது பரிசை ராஜஸ்தானும், மூன்றாவது பரிசை தமிழ்நாடும் பெற்றுள்ளன.நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள், மாவட்டங்கள், ஊராட்சி அமைப்புகளுக்கும் மத்திய அரசு சார்பில் தேதிய நீர் விருதுகள் வழங்கபடுகின்றன. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான விருதுகளை மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் இன்று அறிவித்தார். நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கான முதல் பரிசை உத்தரப்பிரதேசமும், இரண்டாவது பரிசை ராஜஸ்தானும், மூன்றாவது பரிசை தமிழ்நாடும் பெற்றுள்ளன.

தென்மண்டலத்தில் நீர் மேலாண்மையில் நீர்வளத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கான‌ சிறந்த கிராமப் பஞ்சாயத்துக்கான பிரிவில், செங்கல்பட்டு மாவட்டம் வெள்ளப்புத்தூர் ஊராட்சி 2-ம் இடத்தைப் பெற்றிருக்கிறது. மேலும் சிறந்த நகர்புற உள்ளாட்சிக்கான பிரிவில் மூன்றாவது பரிசு மதுரை மாநகராட்சிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சிறந்த பள்ளிக்கான முதல் பரிசை காவேரிபட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றுள்ளது. சிறந்த தொழில் நிறுவனத்திற்கான இரண்டாவது பரிசை ஹுண்டாய் மோட்டார் நிறுவனம் தட்டி சென்றுள்ளது. சிறந்த அரசு சாரா அமைப்புக்கான விருதை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தற்போதைய தண்ணீர் தேவை, ஆண்டுக்கு சுமார் 1,100 பில்லியன் கன மீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது 2050-ம் ஆண்டு வாக்கில், 1,447 பில்லியன் கன மீட்டராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதை தன்னுடைய டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் ஷெகாவத். அதில், ''இன்று நான் தேசிய நீர் விருதுகள் 2020 வெற்றியாளர்களை அறிவித்தேன். உத்தரப்பிரதேசம் முதலிடத்தையும், ராஜஸ்தான் இரண்டாம் இடத்தையும், தமிழ்நாடு மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று மாநில முதல்வர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சிறப்பு நன்றிகளை உரித்தாக்குகிறேன். மாநிலத்தின் நீர் மேலாண்மை குறித்து சரியான தகவல்களை தந்தமைக்கு நன்றி'' என்று டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

Scroll to load tweet…