Nainar Nagendran : அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்த நிலையில் தமிழக பாஜக மாநில புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Nainar Nagendran : கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வந்தார். இன்னும் ஓரிரு மாதங்களில் அவரது பதவிக்காலம் முடிகிறது. இதையடுத்து பாஜக மாநில தலைவர் பதவிக்கான தேர்தலை பாஜக அறிவித்தது. இதில், நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவரே பாஜக மாநில தலைவராக ஒருமுகமாக தேர்வு செய்யப்பட்டார்.

கூட்டணி உறுதியான குஷியில் அமித்ஷா, அண்ணாமலைக்கு விருந்து அளித்த இபிஎஸ்!

ஆரம்பம் முதலே நயினார் நாகேந்திரனின் பெயர் அடிப்பட்டு வந்த நிலையில் இறுதியில் அவரே பாஜக மாநில புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் தான் சென்னை வானகரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! பாராட்டிய கையோடு உறுதிப்படுத்திய அமித்ஷா!

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல் முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்பட பாஜக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டார். மேலும், மாநில தலைவருக்கான சான்றிதழையும் நயினார் நாகேந்திரன் பெற்றுக் கொண்டார். அப்போது பேசிய அண்ணாமலை தனது தலைவர் பதவிக்கான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மேலும், புதிய தலைவரான நயினார் நாகேந்திரனுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

🔴LIVE: தமிழக பாஜக புதிய மாநில தலைவர் பதவியேற்பு விழா