யார் நாகர்கோவில் மாநகராட்சியை கைப்பற்றுவது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி நாகர்கோவில் மாநகராட்சியில் 18 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.. அதன் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் இதோ உங்களுக்காக..
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. நாகர்கோவில் மாநகராட்சியை எந்தக் கட்சி கைப்பற்றி வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி, அ.தி. மு.க., பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் 52 வார்டுகளிலும் வெற்றிக்கனியை பறிப்பது யார்? என்பது வருகிற 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகுதான் தெரியவரும்.
நாகர்கோவில் மாநகரில் உள்ள 52 வார்டுகளில் 27 வார்டுகளை ஒரே கட்சி கைப்பற்றும் பட்சத்தில் மேயர் பதவியை பெறுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது. ஆனால் அதை விட குறைவான இடங்களைப் பிடித்திருந்தால் மேயர் பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி ஏற்படும். தற்பொழுது மேயர் பதவியை கைப்பற்றுவதில் தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா இடையே கடும் போட்டி நிலவுகிறது.
எனவே இந்தமுறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாகர்கோவில் பகுதி வாக்காளர்கள் யாருக்கு ஆதரவு தரப் போகின்றனர் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி நாகர்கோவில் மாநகராட்சியில் 18 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அவற்றின் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் அறிந்துகொள்ள ஏசியாநெட் தமிழை தொடர்ந்து படியுங்கள்.
