Nagapattinam fishermen who were at sea for 4 people mysteriously
நடுக்கடலில் மீன்படித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 4 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை சக மீனவர்கள் தேடிக் கொண்டுள்ளனர்..
நாகை ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார், சத்யபாலன், அருண்குமார் மற்றும் ஸ்ரீநாத். மீனவர்களான இவர்கள் நான்கு பேரும் கடந்த 13 ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர்.

குறிப்பிட்ட தேதியில் இவர்கள் கரை திரும்பாத்தால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் மாயமான 4 பேரை ஆழ்கடலில் தேடி வருகின்றனர்.
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில் தற்போது நான்கு மீனவர்கள் மாயமாகி இருப்பது நாகை மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
