தமிழக அரசின் நான் முதலவன் திட்டம்.. ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வு - மாணவர்கள் எப்படி விண்ணப்பிக்கலாம்?
நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு தொடர்ச்சியாக செய்து வருகிறது.
நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வில் ஊக்கத்தொகைக்காக தற்பொழுது நடத்தப்படவிருக்கின்ற மதிப்பீட்டு தேர்வுகள் குறித்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழக முழுவதும் சுமார் 1000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
10 மாதங்களுக்கு ஒரு மாதத்திற்கு 7500 வீதம் இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊக்கதொகையை பெறுவதற்கான மதிப்பீட்டு தேர்வில் பங்கேற்க மாணவர்கள் அரசு அறிவித்துள்ள இணையதளத்தில் சென்று பதிவு செய்யலாம்.
naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் லாகின் செய்து அதன் மூலம் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். நாளை ஆகஸ்ட் இரண்டாம் தேதி முதல் துவங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம்.
இந்த தேர்வுகளுக்கான அனுமதி சீட்டை மாணவர்கள் ஆகஸ்ட் 30ம் தேதி தரவிறக்கம் செய்துகொள்ளலாம். அதன் பிறகு தேர்வுகள் செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி காலை 10 முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு மாணவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியை சென்று பார்க்கலாம்.
அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. ஓய்வு பெரும் வயது 3 ஆண்டுகள் உயர்வு - முழு விபரம் இதோ !!