யுபிஎஸ்சி மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தில் ரூ.7,500 ஊக்கத்தொகை பெறுவது எப்படி.? இதோ முழு விவரம்
குடிமைப்பணி தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில் மதிப்பீட்டுத் தேர்வின் வாயிலாகத் தேர்வு செய்யப்படும் 1,000 மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.7.500 வழங்குவதற்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான வழிமுறைகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்...

1000 மாணவர்களுக்கு உதவி தொகை
யுபிஎஸ்சி தேர்வில் அதிகளவு தமிழக மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற வகையில் நான் முதல்வன் திட்டத்தில் மாதாந்திர உதவி தொகையாக 7500 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த உதவி தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா.? இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், குடிமைப்பணி தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில் நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டுத் தேர்வின் வாயிலாகத் தேர்வு செய்யப்படும் 1,000 மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.7.500 வழங்குவதற்கான சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குத் தயாராவதற்காக ரூ.25,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
உதவி தொகை பெறுவது எப்படி.?
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதோடு அவர்களது இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தோடும், ஐ.ஏ.எஸ்.ஆர்வலர்களுக்கான இந்த மாதாந்திர ஊக்கத்தொகைத் திட்டமானது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் செயல்படுத்தப்படும். கடந்த சில ஆண்டுகளாக. ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதைக் கருத்தில் கொண்டு அகில இந்திய போட்டித் தேர்வுகளில் மீண்டும் தமிழ்நாட்டை முன்னிலைக்குக் கொண்டுவருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியும் பாடக்குறிப்புகளும் கிடைப்பதை இத்திட்டம் உறுதிசெய்ய முனைந்துள்ளது. மதிப்பீட்டுத் தேர்வை எழுத ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு என்ன.?
குறைந்தபட்ச வயது 21. பொதுப் பிரிவினருக்கான அதிகபட்ச வயது 32. பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் சீர்மரபினருக்கும் அதிகபட்ச வயது 35, பட்டியல் வகுப்பினருக்கும் பழங்குடியினருக்கும் அதிகபட்ச வயது 37, மாற்றுத்திறனாளிகள் 42 வயதைக் கடந்திருக்கக் கூடாது. ஐஏஎஸ் தேர்வுக்கான வயது வரம்பின் அடிப்படையில் மதிப்பீட்டுத் தேர்வுக்கான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டுத் தேர்வின் வாயிலாக தேர்வுசெய்யப்பட உள்ள 1.000 மாணவர்களில் 21- வயது கொண்ட புதிய ஆர்வலர்கள் 50 பேருக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது 22 இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். பட்டப்படிப்பின் போதே. போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு மிகப் பெரிய பயனளிக்கும்.
மதிப்பீட்டுத் தேர்வு
மருத்துவம், கால்நடை அறிவியல் மற்றும் ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு மாணவர்களுக்குச் சலுகை அளிக்கப்படும். என்றாலும், அது குறித்து திறன் மேம்பாட்டுக் கழகமே முடிவுசெய்யும். மதிப்பீட்டுத் தேர்வுக்கு https://nmcep.tndge.org/apply_now என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வானது சரியான விடைகளைத் தேர்வுசெய்யும் வகையில் 150 கேள்விகளைக் கொண்டதாக இத்தேர்வு அமையும். 100 கேள்விகள் பொது அறிவு பிரிவிலிருந்தும் 50 கேள்விகள் சி-சாட் எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகளுக்கான திறனறிவு பிரிவிலிருந்தும் கேட்கப்படும். தவறான கேள்விகளுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் கிடையாது. வினாத்தாள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். தேர்வுக்கான கால அளவு, 3 மணி நேரம்.
உண்டு உறைவிட பயிற்சி
இத்தேர்வில் முதலிடம் பிடிக்கும் 1,000 மாணவர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படும். இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி இந்தப் பட்டியல் தயாரிக்கப்படும். சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கிவரும் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சித் தேர்வு மையம், கோயம்புத்தூரிலும் மதுரையிலும் இயங்கிவரும் அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணி பயிற்சி நிலையங்களுக்கும் சேர்க்கை நடைபெறும். சென்னை பயிற்சி மையத்தில் 225 மாணவர்களுக்கு உண்டு உறைவிட வசதியுடன் முழுநேரப் பயிற்சியும் மாணவர்களுக்குப் பகுதிநேரப் பயிற்சியும் அளிக்கப்பட்டுவருகிறது. கோயம்புத்தூர், மதுரை பயிற்சி நிலையங்களில் பயிற்சியளிக்கப்பட்டுவருகிறது.
போட்டித் தேர்வுக்கு பயிற்சி
இது தவிர வங்கித் துறை. ரயில்வே துறை, எஸ்எஸ்சி உள்ளிட்ட ஒன்றிய அரசின் மற்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும்வகையில் கட்டணமில்லாப் பயிற்சித் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றுவருகிறது. இத்திட்டத்தின் கீழ், 5000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கட்டணமில்லா பயிற்சி, பாடநூல்கள். வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுவருகின்றன. ஐஏஎஸ் தேர்வுகளுக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி, எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் சிறப்புக் கவனம், ஊரக மாணவர்களுக்கும் பயன்படும்வகையில் வல்லுநர்களின் காணொளி வகுப்புகள் என்று போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கு ஏற்ற ஒரு சூழலைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.