mystery person tried to snatch chain from grandmother with knife point
கோயம்புத்தூர்
கோயம்புத்தூரில் வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த பாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர் ஒருவர் நகை பறிக்க முயன்றுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம், மசக்காளிப் பாளையம், மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (லேட்). இவருடைய மனைவி சாரதாமணி (64). இவருடைய மகள் ஹேமலதா (38) திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகளுடன் உள்ளார்.
இந்த நிலையில், கடந்த எட்டு மாதங்களாக ஹேமலதா தனது தாயார் சாரதாமணி வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 5.45 மணியளவில் சாரதாமணி தனது வீட்டின் முன்பு கோலம் போட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது, எங்கிருந்தோ வந்த மர்ம நபர் ஒருவர் சாரதாமணியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 10 சவரன் நகையை கழற்றி தரும்படி கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சாரதாமணி அலறினார்.
சாரதாமணியின் அலறல் சத்தம்கேட்டு வீட்டுக்குள் இருந்து ஹேமலதாவும் மற்றும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் ஓடிவந்தனர். இதனை கண்டு அதிர்ந்த அந்த மர்ம நபர் அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பியோடிவிட்டார்.
ஆனால், அந்த மர்ம நபர் தான் வைத்திருந்த கத்தியால் சாரதாமணியின் கன்னத்தில் கீறிவிட்டு சென்றதால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அவரை கோயம்புத்த்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துவிட்டு பின்னர் மீண்டும் வீடு திரும்பினார்.
அதன்பின்னர் இதுகுறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூர் காவலாளர்கள் வழக்குப்பதிந்து நகை பறிக்க முயன்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் இதுகுறித்த காட்சிகள் எதாவது பதிவாகி உள்ளனவா? என்று காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
கத்தியை காட்டி மிரட்டி பாட்டியை இருந்து நகை பறிக்க முயன்ற சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
