புதுக்கோட்டை
 
புதுக்கோட்டையில் கடையின் பூட்டை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் கல்லா பெட்டியில் இருந்த ரூ.30 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பியோடிவிட்டனர். 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் கந்தர்வகோட்டை காந்தி சிலை அருகே நவதானிய கடை ஒன்று நடத்தி வருகிறார். 

நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடிந்துவிட்டு வழக்கம்போல கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை பாலசுப்பிரமணியன் கடைக்கு திரும்பிவந்த பார்த்தபோது கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

அதன்பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அவர் கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் மர்மநபர்களால் திருடப்பட்டு இருப்பதை பார்த்தார். 

பின்னர், இதுகுறித்து கந்தர்வகோட்டை காவலாளர்களுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலாளர்கள் இதுகுரித்து விசாரித்து வருகின்றனர்.

அதன்பின்னர் இந்த திருட்டு குறித்து பாலசுப்பிரமணியன் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து கடையின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.