தமிழகத்தில் வேலூர், மதுரை , திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் முதல் பிறை தெரிந்ததால் இன்று   ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் தெரிவித்துள்ளார்.

ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை கடந்த ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களின் கடைபிடித்து வந்தனர்.

இதையடுத்து நேற்று மாலை ஷவ்வால் பிறை தென்பட்டதை தொடர்ந்து, இன்று தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்தார்.

 
 

இதனைத் தொடர்ந்து, ரமலான் மாதத்தில் நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள் நோன்பு முடித்து இன்று ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

ரம்ஜான் பண்டிகையையொட்டி அனத்துக்கட்சித் தலைவர்களும் இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.