சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ்சாலையில் வணிகவரித்துறை தலைமை அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் அவரை வெளியே அழைத்து வந்து சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டனர். ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனும்திக்கப்பட்டுள்ளர்.
சென்னை ஆயிரம் விளக்கில் வணிகவரித்துறை தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு தெற்கு மண்டல அமலாக்க பிரிவு அதிகாரியாக பணியாற்றுபவர் தங்கவேல் , இவர் வாகன சோதனை மூலம் அதிக அளவில் பில் இல்லாமல் சரக்கு ஏற்றிவரும் வாகனங்களை மடக்கி சோதனையிடும் அதிகாரி ஆவார்.


 இன்று காலை தங்கவேல் வழக்கம் போல், பணிக்கு வந்துள்ளார். அப்போது அவரை பார்க்க இரண்டு பேர் வந்துள்ளனர். அவ்ர்கள் தங்கவேலுவுக்கு தெரிந்தவர்கள் என்பதால் அவர்களுடன் அவர் வெளியே சென்றார். அப்போது அவரை அந்த நபர்கள் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு ஓடினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்தார். 
அவரை குத்திய ஆசாமிகள் வெளியே ஓடி வந்து தயாராக இருந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி  தப்பி ஓடிவிட்டனர். அவர்களில் ஒருவன் சிகப்பு நிற பனியன் அணிந்திருந்தான் என்று அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். மொத்தம் நான்கு பேர் வந்ததாக தெரிவித்தனர்.
 கத்தி குத்துபட்ட தங்கவேல் உடனடியாக அப்போலோ மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டார். சம்ப்பவ இடத்திற்கு துணை ஆணையர் பெருமாள் நேரில் வந்து விசாரணை நடத்தினார். முன் பகை காரணமாக இந்த கொலை வெறி தாக்குதல் நடந்துள்ளது. கத்தியால் குத்தியவர்கள் பற்றி உடனடியாக கண்ட்ரோல் ரூமில் உஷார் படுத்தியும் அவர்களை பிடிக்க முடியவில்லை.