- Home
- Tamil Nadu News
- வாரத்தின் முதல் வேலை நாளான திங்கள் கிழமை அதுவுமா.. தமிழகத்தில் இன்று 8 மணிநேரம் மின்தடை!
வாரத்தின் முதல் வேலை நாளான திங்கள் கிழமை அதுவுமா.. தமிழகத்தில் இன்று 8 மணிநேரம் மின்தடை!
தமிழ்நாடு மின்சார வாரியம் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. கோவை, பெரம்பலூர், அம்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 5 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை ஏற்படும்.

மாதாந்திரப் பராமரிப்பு பணி
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் 5 முதல் 8 மணி நேரம் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
கோவை
கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி.
பல்லடம்
கரடிவாவி, புளியம்பட்டி, பொன்னிவாடி, வடுகபட்டி, சின்னகம்பட்டி, அக்கரைப்பாளையம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் அடங்கும்.
பெரம்பலூர்
அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலபுலியூர், சத்திரமனை, கண்ணபாடி, அய்யனார்பாளையம், வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
உடுமலைப்பேட்டை
இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம், தூங்காவி, ராமகவுண்டன்புதூர், மாதரத்தி, போல்ட்ராபட்டி, கே.கே.,புதூர்.
அம்பத்தூர்
ரெட்ஹில்ஸ், கில்கொண்டையூர், அரக்கம்பாக்கம், கர்பாக்கம், தாமரைப்பாக்கம், கதாவூர், வேளச்சேரி, பாண்டேஸ்வரம், காரணை, புதுக்குப்பம், வாணியன் சத்திரம், அயிலச்சேரி, குருவாயில், பூச்சியாத்திபேடு, கொடுவள்ளி, பால்பண்ணை பை ரோடு, பால்பண்ணை ரோடு, பால்பண்ணை சாலை சோத்துப்பாக்கம் சாலை, நியூ ஸ்டார் சிட்டி, காளிக்குப்பம், அழிஞ்சிவாக்கம், பாலாஜி கார்டன், ஆரூன் உல்சா சிட்டி, வடகை, மகாராஜா நகர், எம்.எச். சாலை, வினேஷ் நகர், திருவிக நகர், டிஎன்கே நகர், அன்பு நகர், விளாங்காடுபாக்கம், மல்லிமா நகர், டி.எச். ஹை ரோடு, ஆலமரம், காந்தி நகர், ஆசை தம்பி தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுளில் மின்தடை ஏற்படும்.

