சேலம் அருகே ஏற்காடு மலை அடிவாரத்தில் இளைஞர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் தச்சு வேலை செய்து வந்தார். இந்நிலையில் கன்னங்குறிச்சியை சேர்ந்த பிரபல ரவுடி குமாரும், அவரது நண்பர்கள் 4 பேரும் வீட்டிற்கு வந்து காரில் அழைத்து சென்றுள்ளனர். 

இதைதொடர்ந்து நீண்ட நேரம் ஆகியும் பாபு வீட்டிற்கு வராததால் அவரது உறவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இன்று பிற்பகல் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள காட்டு பகுதியில் பாபு கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். 

இதை அறிந்த ஏற்காடு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணையில் கொலை செய்யப்பட்ட பாபுவை, மது குடிக்க வைத்து கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த கொலை தொடர்பாக ரவுடிகள் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.