சேலத்தில், தன்னை பார்த்து குரைத்த நாயை, நகராட்சி ஊழியர்களை ஏவி விட்டு, அடித்துக் கொன்ற நகராட்சி ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விலங்கு நல ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேட்டூர் நகராட்சி பொதுப்பணித்துறை குடியிருப்பில் வசிக்கும் கோபால் என்பவர் பூலாம்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். அவர் வீட்டில் செல்லமாக வளர்த்து வந்த நாய், எதிரே உள்ள குடியிருப்பில் வசித்து வரும் மேட்டூர் நகராட்சி ஆணையாளரைப் பார்த்து அடிக்கடி குரைத்துள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த நாராயணன் மேட்டூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் நாயை பிடித்துச் சென்ற நகராட்சி ஊழியர்கள், நாயை கொடூரமாக அடித்து கொன்று தெருவில் இழுத்துச் சென்றனர். 

இச் சம்பவத்தை அங்கிருந்த இளைஞர்கள் சிலர், செல்போனில் வீடியோ பதிவு செய்த சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ள நிலையில், நகராட்சி ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.