Asianet News TamilAsianet News Tamil

கவலை வேண்டாம்... கூடுதலாக 900 பேருந்துகள்... பழைய கட்டணம் தான்...

MTC will Operate normal bus for Bus Fare Hike
MTC will Operate normal bus for Bus Fare Hike
Author
First Published Jan 23, 2018, 9:40 AM IST


கட்டண உயர்வை சமாளிக்க முக்கிய வழித்தடங்களில் சாதாரண பேருந்துகள 900 ஆக அதிகரிக்கலாமா? என உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

டீசல் கட்டண உயர்வு, பராமரிப்பு கட்டண உயர்வு ஆகியவற்றால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி  கடந்த இரு தினங்களுக்கு முன்பு பேருந்து கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. வழக்கத்தை காட்டிலும் இரண்டு மடங்கு கட்டண உயர்த்தப்பட்டுள்ளது.  கட்டண உயர்வு குறித்த தகவல் தெரியாமல், வழக்கம் போல  வந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சில இடங்களில் போதிய கட்டணம் இல்லாததால் பயணிகளை பாதி வழியிலேயே இறக்கிவிட்ட சம்பவங்களும் அரங்கேறியது. நடத்துனர்களின் இந்த செயலால் பெண்கள், வயதானவர்கள் என ஒட்டுமொத்தமாக பாதித்தனர்.

சென்னை மாநகரம் மற்றும் புறநகர் மக்களின் போக்குவரத்து தேவை மாநகர பஸ்களையும் மின்சார ரெயிலையும் அடிப்படையாக கொண்டுள்ளது.

சென்னையில் தினமும் 3200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. சுமார் 42 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். சாதாரண பஸ் white board, express, Delux என பிரித்து பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் சாதாரண பஸ்களில்தான் கட்டணம் குறைவாக இருந்தது. இப்போது இந்த பஸ்களில் கூட குறைந்த கட்டணம் ரூ.5 ஆக உயரத்தப்பட்டுள்ளது.

MTC will Operate normal bus for Bus Fare Hike

பஸ் கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பிய போதிலும் கட்டணத்தை குறைக்கும் திட்டம் இல்லை என அமைச்சர் கைவிரித்து விட்டார். அரசின் இந்த அதிரடியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மக்களின் இந்த இன்னல்கள கருத்தில் கொண்டு மாநகர பஸ்களில் மட்டும் கட்டணத்தை குறைக்காமல் மாற்று வழியில் பொது மக்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். மற்ற நகரங்களை காட்டிலும் தலைநகரம் சென்னையில் அரசு பஸ்சில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம் இருப்பதால் சாதாரண பஸ்களை கூடுதலாக இயக்க அரசு ஆலோசித்து வருகிறது.

நூற்றுக்கும் மேலான வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களில் முக்கியமான வழித்தடங்களை கண்டறிந்து அதில் சாதாரண பஸ்களை அதிகளவு இயக்கினால் ஓரளவிற்கு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என அரசு கருதுகிறது.

நஷ்டத்தில் இயங்கி வந்த மாநகர பஸ்களை பெரும் நஷ்டத்திற்கு தள்ளாமல் இருப்பதற்காக குறைந்த அளவில்தான் சாதாரண பஸ்கள் இதுவரையில் இயக்கப்பட்டன. வணிக ரீதியாக எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பஸ்கள்தான் அதிகளவு இயக்கப்பட்டது.

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கட்டண உயர்வை சமாளிக்க அரசு சாதாரண பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்து இயக்கலாம் என்று முடிவு செய்கிறது. 300-க்கும் குறைவான அளவில்தான் சாதாரண பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் அதனை 900 ஆக அதிகரிக்கலாமா? என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சாதாரண பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் ஓரளவிற்கு  நிலைமையை சமாளிக்கலாம் என தெரிகிறது. மேலும் சிறிய பேருந்துகளிலும் சாதாரண பேருந்து கட்டணத்தை வசூலிப்பது பற்றியும் முடிவு செய்யப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios