சிலிண்டரை வெடிக்க வைத்து தாய், மற்றும் தனது இரு மகள்களுடன் தற்கொலை செய்துகிண்ட சம்பவம் அதிகாலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தயிர்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை பெரும் சத்தத்துடன் கேஸ் சிலிண்டர் வெடித்துள்ளது. இதில் வீட்டிலிருந்த தாய் ஜெயமணி, மகள்கள் தனுஷ்யா கல்லூரி படிக்கிறார், பவித்ரா பள்ளியில் படிக்கிறார். 3 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிகாலையிலேயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலிண்டர் வெடிப்பு சம்பவம் கொலையா? தற்கொலையா? என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு எழுந்துள்ளதால் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

படுக்கையறையில் கேஸ் சிலிண்டர் இருக்கும் நிலையில் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் கழிவறையில் இருக்கின்றன. மேலும், இந்த சம்பவம் நடக்கும் முன்பு ஜெயமணியின் கணவர் ராஜா வயலுக்கு சென்றிருந்தால்  அந்த நேரத்தில் மகள்களுடன் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையினர் சந்தேகம் அதிகமானதால் இது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.