Asianet News TamilAsianet News Tamil

சாத்தான்குளம் நூலகத்தில் இருந்து இலங்கை யாழ்பாண நூலகத்திற்கு செல்லும் 350-க்கும் மேற்பட்ட புத்தகங்கள்...

More than 350 books going from sathankulam Library to Sri Lanka Jaffna Library
More than 350 books going from sathankulam Library to Sri Lanka Jaffna Library
Author
First Published Dec 26, 2017, 8:05 AM IST


கன்னியாகுமரி

சாத்தான்குளம் நூலகத்தில் இருந்து 350-க்கும் மேற்பட்ட புத்தங்கள் இலங்கை யாழ்பாண நூலகத்திற்கு வழங்கும் விழா சாத்தான்குளம் அரசு கிளை நூலகத்தில் நடைப்பெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம், சாத்தான்குளம் ராம.கோபாலகிருஷ்ணபிள்ளை அரசு கிளை நூலகத்தில், யாழ்பாண நூலகத்திற்கு நன்கொடையாக பெறப்பட்ட புத்தகங்கள் வழங்கும் விழா நேற்று நடைப்பெற்றது.

இந்த விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் ஓ.சு.நடராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கனகராஜ், வட்டார மனித நேய பெருமன்றச் செயலர் மகா.பால்துரை, விஜயராமபுரம் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜான்லூயிஸ் வரவேற்றுப்  பேசினார்.

இதில் கிளை நூலகம், ஊர்புற நூலகம், பகுதி நேர நூலகம் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் நன்கொடையாக 350-க்கும் மேற்பட்ட நூல்களும், பணமும் பெறப்பட்டன.

நூல்களை சாத்தான்குளம் வர்த்தக சங்கச் செயலர் மூலிகை மருத்துவர் மதுரம் செல்வராஜ், மாவட்ட நூலகர் ராம்சங்கரிடம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட நூலகர் ராம்சங்கர் பேசியது:

"மாவட்ட நூலக மையத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது கோவில்பட்டி, சாத்தான்குளம், திருச்செந்தூர் கிளை நூலகத்தில் இதே போன்று பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதற்கு அரசிடமிருந்து நிதி ஒதுக்கப்படவில்லை. அதற்கான இடம் மற்றும் இதற்கு நிதி உதவி செய்ய நன்கொடையாளர்கள் இருந்தால் வாசகர்கள் சார்பில் நடத்தி கொள்ளலாம்.

மேலும், மாவட்டத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் இரு நூலகத்தை தத்து எடுத்து பராமரிக்க கேட்டு வருகின்றனர். அதில் இந்த நூலகம் தேர்வு பெற்றால் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய தயாரக உள்ளோம். மேலும் பயிற்சி மையம் அமைக்க நூலக இயக்குநரிடம் பரிந்துரைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதில் புதிய நூலக புரவலராக அணிஸ் அந்தோணி சவரிமுத்து இணைந்தார். பாரதி இலக்கிய மன்ற அமைமப்பாளர் ஈஸ்வர்சுப்பையா, ஒய்வு பெற்ற மருந்தாளுநர் பாப்புராஜ், ஒய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன்,

யோகா ஆசிரியை ராஜலட்சுமி, ஓய்வுபெற்ற பள்ளி எழுத்தர் பிரேம்குமார், ஆசிரியர் சிவபாலன், நூலகர் சுப்பிரமணியன் உள்ளிட்ட கிளை நூலகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் இறுதியில் நூலகர் சித்திரைலிலிங்கம் நன்றித் தெரிவித்தார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios